நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவ வில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்க வில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்க வில்லை
வாராயோ ....
சகியே சகித்துகொள் என் பிதற்றல்களை
மன்னித்து விடு என் மழுபல்களை
ஊதி விடு என் உளறல்களை
பாவம் என் காதல் என்னோடு வாழட்டும் ...
இன்னும் கோபம் குறைய வில்லையா
புதைத்து விடு என்னை
நம் காதலாவது வாழட்டும் ...