vendredi 31 décembre 2010

என்றும் உனை மறவேன் !!



எனை மறந்த போதும் உனை மறக்காத...
§

ஏக்கம் ...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவ வில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்க வில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்க வில்லை
வாராயோ ....

தனிமை...

யாரும் இல்லாமல் இருப்பது தனிமை அல்ல
நீ இல்லாமல் இருப்பதே !

காதல் இலக்கணம் II

நீ இன்றி நான் இல்லை என்பதல்ல காதல்
எது இல்லை என்றாலும் நான் இருக்கிறேன் என்பது தான் காதல்!

samedi 25 décembre 2010

நிலவின் மௌனம் ...

உன்னை நானும் சேரும் காலம் என்று வந்து கூடுமோ
அந்த சொர்க்கம் காணவே மௌனம் ஆகி தேய்கிறேன் ...

கண் (நீ)ர்..

உன் கண்களில் நானும் பிறந்திருந்தால்
கண்ணீராய்  கலந்திருப்பேன் !

jeudi 23 décembre 2010

காதல் இலக்கணம் I

விழ்துதலும் விழ்சியுற செய்வதும் அல்ல காதல்
விட்டுகொடுத்தலும் வாழ வைப்பதும் தான் காதல்!

காதலை வாழ விடு !

சகியே சகித்துகொள் என் பிதற்றல்களை
மன்னித்து விடு என் மழுபல்களை
ஊதி விடு என் உளறல்களை
பாவம் என் காதல் என்னோடு வாழட்டும் ...
இன்னும் கோபம் குறைய வில்லையா
புதைத்து விடு என்னை
நம் காதலாவது வாழட்டும் ...

ஹ்ம்ம் ...

அன்று ஆயிரம் கோடி அர்த்தங்கள் சொன்ன என் ஹ்ம்ம்
இன்று என்னை அஸ்தமிக்கும்
கோபம் மூட்டுகிறது உனக்கு !

mercredi 22 décembre 2010

உன் ஒற்றை பார்வை ...

உலகின் கண்களுக்கெல்லாம் வெற்று காகிதம்
உன் பார்வைக்கு மட்டுமே தெரியும்
அதில் விம்மும் என் இதயம்
அதை ஒரே ஒரு முறை பார்ப்பாயா ?

மௌனம் ...

மௌனம் கலைக்க நிலவை அழைத்தவளே..
உனக்கு தெரியாததா நிலவின் மௌனம் ..
மௌனம் தானே காதலின் உச்சம் !

நீயும் நானும் ..

கருப்பான வலைபூவில்
வெள்ளையால் மட்டுமே
நம் காதல் !

dimanche 12 décembre 2010

ஏகாந்தம் இனிது !

உன் நினைவுகளுடன் இருக்கும்
ஏகாந்தம் இனிது !

தூது ...

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேச வேண்டும்
இந்த மௌன நாடகம் மெல்ல களைந்து போகவே
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா...